வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 15 மார்ச் 2022 (13:23 IST)

இரு அவைகளுக்கும் 4 நாட்கள் விடுமுறை!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17ம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

 
உக்ரைன் போரால் இந்திய பொருளாதாரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இன்று தொடங்கிய இரண்டாம் சுற்று பட்ஜெட் கூட்டத்தொடர் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் உக்ரைன் போர் விவகாரம், இந்தியர்கள் மீட்பு குறித்த விவாதங்கள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
இந்நிலையில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கும் வரும் 17 ஆம் தேதி முதல் 4 நாட்கள் விடுமுறை என வெங்கையா நாயுடு தெரிவித்தார். ஹோலி பண்டிகையையொட்டி வியாழன், வெள்ளியன்று இரு அவைகளும் செயல்படாது என தெரியவந்துள்ளது.