தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க விடுமுறை: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!
தி காஷ்மீர் ஃபைல்ஸ் படம் பார்க்க விடுமுறை: மத்திய பிரதேச அரசு அறிவிப்பு!
தி காஷ்மீர் பைல்ஸ் என்ற படத்தை பார்ப்பதற்காக போலீசாருக்கு விடுமுறை அளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநிலம் அறிவித்துள்ளது.
சமீபத்தில் வெளியான தி காஷ்மீர் பைல்ஸ் என்ற திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் காஷ்மீரில் தீவிரவாதிகளால் பண்டிட்கள் வெளியேற்றப்பட்ட சம்பவத்தின் அடிப்படையில் இந்த படம் உருவாக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த படத்தின் குழுவினர்களை நேரில் அழைத்து பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார் என்பதும் மத்திய பிரதேச மாநிலம் ஏற்கனவே இந்த படத்திற்கு வரிவிலக்கு அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த படத்தை போலீசார் குடும்பத்துடன் பார்க்க விடுமுறை அளிக்கப்படும் என மத்திய பிரதேச மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்