வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : செவ்வாய், 30 ஜூலை 2024 (17:20 IST)

AIRTEL- JIO- வை நடுங்க வைத்த BSNL..! வாடிக்கையாளர்களை கவர்ந்த ஆஃபர்கள்.! விரைவில் 5 ஜி சேவை.!!

BSNL
ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால், அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள் தற்போது பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி உள்ளனர். விரைவில் 5g சேவையை பிஎஸ்என்எல் நிறுவனம் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரிலையன்ஸ் ஜியோ (Reliance Jio), ஏர்டெல் (Airtel), விஐ (Vi) என்று அழைக்கப்படும் வோடபோன் ஐடியா (Vodafone Idea) போன்ற தனியார் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை தாறுமாறாக உயர்த்தி உள்ளன. பல்வேறு சலுகைகளை அறிவித்த ஜியோ உள்ளிட்ட நிறுவனங்கள், தற்போது கட்டணங்களை உயர்த்தி வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளன. 
 
கட்டண உயர்வால் அதிருப்தி அடைந்த வாடிக்கையாளர்கள், இப்போது கூட்டம் கூட்டமாக BSNL அலுவலகங்களை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர். இதன் மூலம் இரண்டே வாரங்களில் பிஎஸ்என்எல்லின் பயனர் எண்ணிக்கை டாப் லெவலில் உயர்ந்துள்ளது.  இரண்டே வாரங்களில் அதிகளவு புதிய பயனர்களை பெற்ற நிறுவனமாக BSNL மாறியுள்ளது.

BSNL Network
ஒரு நாளைக்கு சராசரியாக இந்தியா முழுவதும் 2 லட்சம் பேர் பி.எஸ்.என்.எல் பக்கம் வருகிறார்கள். கேரளாவில் மட்டும் புதியதாக 25 லட்சம் வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளனர். சுமார் 1 கோடி புதிய வாடிக்கையாளர்கள் கிடைத்துள்ளதாக பிஎஸ்என்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
 
இதற்கு முக்கியமான காரணம் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் மலிவு விலை தான் என்பதை யாராலும் மறுக்க முடியாது. இன்றைக்கும் பி.எஸ்.என்.எல் 107 ரூபாய்க்கு பேக்கேஜ் திட்டத்தை வைத்துள்ளது. இதே சேவைக்கு தனியார் நிறுவனம் இரண்டு மடங்கு கட்டணம் வசூலிக்கிறது.
 
தற்போது பிஎஸ்என்எல் இந்தியாவின் பல இடங்களில் அதன் 4ஜி சேவையை துவங்கியுள்ளது. விரைவில் இன்னும் 1000 புதிய பிஎஸ்என்எல் 4ஜி டவர்களை சென்னை (New BSNL 4G towers in Chennai) மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நிறுவ பிஎஸ்என்எல் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

இதனை தொடர்ந்து தமிழ்நாட்டில் உள்ள பல இடங்களிலும் வேகமாக இன்னும் பல ஆயிரம் புதிய டவர்களை நிறுவள்ளதாக பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது. டாடா நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்துள்ள பிஎஸ்என்எல் நிறுவனம் விரைவில் இந்தியா முழுக்க அதன் 4ஜி சேவையை நடைமுறைக்கு கொண்டுவரும்.

அதேபோல், இந்தியாவில் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, 4ஜி டவர்களில் இருந்தே 5ஜி நெட்வொர்க்கை வழங்கும் புதிய தொழில்நுட்பத்தையும் பிஎஸ்என்எல் மற்றும் டாடா சேர்ந்து உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்ததாக எலான் மாஸ்க் உடன் பி.எஸ்.என்.எல். கைகோர்க்க உள்ளது. 


ஆகஸ்ட் மாதத்திற்குள் சென்னை முழுவதும் 4ஜி சேவையைக் கொடுக்க தயாராகி ருவதாகவும், ஆகஸ்ட் 15க்குள் சென்னையில் ஒரு சில பகுதிகளில் முதற்கட்டமாக 5ஜி சேவையை பி.எஸ்.என்.எல் வழங்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தொடர்ந்து வாடிக்கையாளர்கள் வெளியேறி வருவதால் ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளன.