செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 22 அக்டோபர் 2024 (16:17 IST)

புதிய லோகோ.. புதிய சேவைகள்.. பட்டைய கிளப்பும் பி.எஸ்.என்.எல்..!

பி.எஸ்.என்.எல் நிறுவனத்திற்கு புதிய லோகோ வடிவமைக்கப்பட்டுள்ள நிலையில் 7 புதிய சேவைகள் தொடங்கவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்தியாவில் செயல்படும் முக்கிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான பிஎஸ்என்எல், சமீபத்தில் 4ஜி சேவையை நாடு முழுவதும் விரிவாக்கி வரும் நிலையில், அதன் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில்  7 புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
 
இத்துடன், நிறுவனத்தின் செயல்பாட்டில் வேகத்தை கூட்டும் வகையில் பாதுகாப்பு, குறைந்த செலவினம் மற்றும் நம்பகத்தன்மை ஆகியவை மையமாக கொண்டு ஏழு புதிய சேவைகளை அறிமுகம் செய்துள்ளது.
 
இந்த புதிய சேவைகளில், ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க், பிஎஸ்என்எல் ஐபிடிவி, மொபைல் கனெக்டிவிட்டி, பைபர் டு தி ஹோம் பயனர்களுக்கான தேசிய Wi-Fi ரோமிங், அனுர்த்தமான தொடர்பாடல் சேவைகள், மற்றும் தனிப்பட்ட 5ஜி நெட்வொர்க் உட்பட 7 முக்கிய அம்சங்கள் அடங்கும்.
 
ஸ்பேம்-ஃப்ரீ நெட்வொர்க் மூலம், பயனர்கள் மோசடி அழைப்புகள் மற்றும் செய்திகள் பெறாமல் பாதுகாப்பாக இருக்கலாம். மேலும், டைரெக்ட் டு டிவைஸ் கனெக்டிவிட்டி மூலம், சாட்டிலைட் மற்றும் மொபைல் நெட்வொர்க் மூலம் தடையில்லா நெட்வொர்க் அனுபவத்தை பெறலாம் என பிஎஸ்என்எல் தெரிவித்துள்ளது.
 
 
Edited by Mahendran