1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 27 டிசம்பர் 2023 (18:47 IST)

ஊடுருவல்காரர்களை விரட்ட தேனீக்கள் வளர்க்கும் பி.எஸ்.எஃப் வீரர்கள்

india - bangaldesh border
இந்திய- வங்கதேச எல்லையில் பிஎஸ்எஃப் வீரர்கள் ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்காக 200 பெட்டிகள் வைத்து தேனீக்கள் வளர்த்து வருகின்றனர்.

இந்திய- வங்கதேச எல்லைப் பகுதியானத் இந்திய எல்லை பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மேற்கு வங்கம், பீகார் எல்லைகளைக் கொண்டிருக்கும் வங்கதேசத்தில் இருந்து  சிலர் இந்தியாவுக்குள்  ஊடுருவி வருகின்றனர்.

வங்கதேச எல்லையில் அமைந்துள்ள சில பகுதிகளான சாப்ரா, கடிபூர், கிருஷ்ணகஞ்ச்ச் போன்ற பகுதிகளில் முள்வேலி அமைக்கப்பட்ட போதிலும், திறந்தவெளியில் ஊடுருவல் நடந்து வருகிறது.

எனவே ஊடுருவல்காரர்களை விரட்டுவதற்காகவவும் வங்கதேச கும்பல் இந்தியாவிற்குள் ஊடுருவி வருவதை கட்டுப்படுத்துவதற்காகவும், சில இடங்களில் தேனீக்கள் கூடுகள் அமைக்கப்பட்டு வருவதாக  எல்லை பாதுகாப்பு படை வட்டாரத்தில் இருந்து தகவல் வெளியாகின்றன.