செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (19:41 IST)

மாப்பிள்ளை கருப்பு என கூறிய மணப்பெண்ணை கோடாரியால் வெட்டி கொன்ற அண்ணன்!

திருமணமாவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் மாப்பிள்ளை கருப்பு என்றும் இந்த மாப்பிள்ளையை நான் திருமணம் செய்யமாட்டேன் என்றும் மணப்பெண் கூறியதை அடுத்து அந்த பெண்ணின் அண்ணன் கோடாரியால் மணப்பெண்ணை வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஷியாம் சுந்தர் என்பவரின் தங்கை சந்திரகலாவுக்கு மாப்பிள்ளை பார்த்து நிச்சயம் செய்யப்பட்டது. இதனை அடுத்து திருமணத்திற்கு ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தபோது திடீரென மாப்பிள்ளை கருப்பு என்பதால் அவரை திருமணம் செய்ய மாட்டேன் என்று அடம்பிடித்த மணப்பெண்ணை சமாதானப்படுத்தும் முயற்சியில் இரு வீட்டாரும் ஈடுபட்டிருந்தனர்
 
இந்த நிலையில் திடீரென சந்திரகலாவின் அண்ணன் ஷியாம் சுந்தர் மணப்பெண்ணை சரமாரியாக வெட்டியதால் சம்பவ இடத்திலேயே மணப்பெண் துடிதுடித்து உயிரிழந்தார். இதனால் திருமணத்துக்கு வந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 
 
இந்த சம்பவத்தை அடுத்து போலீசார் சந்திர கலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து ஷியாம் சுந்தர் கைது செய்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது