திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (08:24 IST)

ஷங்கர் மாப்பிள்ளை யார் தெரியுமா? புடிச்சாலும் புளியங்கொம்பா புடிச்சிட்டாரு!

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வரியாவின் திருமணம் நேற்று  (27-06-2021, ஞாயிற்றுக்கிழமை) காலை மகாபலிபுரத்தில் உள்ள வெல்கம் ஹோட்டலில் நடைபெற்றது. இத்திருமணத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் மட்டுமே கலந்துக்கொண்டனர். 
 
டாக்டரான ஐஸ்வர்யாவை திருமணம் செய்துக்கொண்டுள்ள  ரோஹித் புதுச்சேரி கிரிக்கெட் அணியின் கேப்டனாக உள்ளார். இவர் தமிழ்நாடு பிரிமியர் லீகில் விளையாடும் மதுரை பேந்தர்ஸ் அணியின் உரிமையாளரான தொழிலதிபர் தாமோதரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
 
29 வயதான ரோஹித், தமிழ்நாடு கிரிக்கெட் அணிக்குள் விளையாட இடம் கிடைக்காததால் 2015-ல் இலங்கைக்குச் சென்று விளையாடினார். அதன்பிறகு தந்தை தாமோதரனின் முயற்சியால் புதுச்சேரி ரஞ்சி அணி தொடங்கப்பட்டு அதற்கு கேப்டனாகவும் மாறினார் என்பது பலரும் அறிந்திராத ஒன்று.