11. 52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ் : மத்திய அமைச்சர் அறிவிப்பு

railway
sinojkiyan| Last Updated: புதன், 18 செப்டம்பர் 2019 (15:57 IST)
நாட்டில் பொதுத்துறை நிறுவனமான ரயில்வேதுறையில் பல லட்சக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். இதில் வருடந்தோறும் பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்கள் உருவாவதால், இளைஞர்களுக்கு அதிக வேலை வாய்ப்பளிக்கும் வகையில் இந்திய ரயில்வே பொதுத்துறை இயங்கிவருகிறது.
இந்நிலையில் மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை அடுத்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்துவருகிறது.
 
இந்த நிலையில் மத்திய ரயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் அறிவித்துள்ளது. ரயில்வே ஊழியர்கள்க்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளதாவது :
Prakash Javadekar
கடந்த ஆறு ஆண்டுகளாக 78நாட்கள் ஊதியத்தை போனஸாக பாஜக அரசு வழங்கிவருகிறது. எனவே, 11. 52 லட்சம் ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியம் போனஸாக வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 
 
மத்திய அரசின் இந்த போனஸ் அறிப்பால் பல லட்சம் ரயுல்வே ஊழியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :