1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : புதன், 21 ஏப்ரல் 2021 (08:42 IST)

பெங்களூரு சுடுகாட்டில் டோக்கன்: பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு!

பெங்களூரு சுடுகாட்டில் டோக்கன்: பிணங்கள் குவிந்து வருவதால் பரபரப்பு!
கர்நாடக மாநிலத்தில் குறிப்பாக தலைநகர் பெங்களூருவில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருவதை அடுத்து கொரோனாவால் பலியாகும் உயிரிழப்பும் அதிகரித்து வருகிறது என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன 
 
இந்த நிலையில் பெங்களூரில் கொரோனாவால் பலியானவர்களை தகனம் செய்ய சுடுகாடுகளில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஒரே நாளில் பல சடலங்கள் குவிந்துள்ளதால் தற்போது அங்கு டோக்கன் முறையில் உடல் தகனம் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
 
பெங்களூரில் சுடுகாட்டில் பிணங்கள் குவிந்து கொண்டு இருப்பதை அடுத்து ஒவ்வொரு பிணத்திற்கும் டோக்கன்கள் வழங்கப்படுவதாகவும் அந்த டோக்கன்கள் அடிப்படையில் தகனம் செய்யப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
 
அதேபோல் பெங்களூரு மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வருவதாகவும் தனியார் மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனை முழுதும் நிரம்பி விட்டது என்றும் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதால் நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்துள்ளன