வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 16 ஏப்ரல் 2018 (15:41 IST)

காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்படாது; பாஜக தேசிய பொதுச்செயலாளர்

பாஜகவின் தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் காவிரி விவகாரத்தில் கர்நாடகத்திற்கு எதிராக பாஜக ஒருபோதும் செயல்படாது என தெரிவித்துள்ளார்.
உச்ச நீதிமன்றம் கெடு விதித்தும் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவில்லை. இதனையடுத்து தமிழக அரசு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை தொடந்தது. கர்நாடகாவில் சட்ட பேரவைத் தேர்தல் நடைபெறப் போவதால், காவிரி மேலாண்மை வாரிய அமைக்க 3 மாத கால அவகாசம் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசும் மனு தாக்கல் செய்தது. இந்த வழக்கானது 9 ந் தேதி விசாரணைக்கு வந்தது. காவிரி விவகாரத்தில் மத்திய அரசு, வரைவு திட்டம் அறிக்கையை மே 3ஆம் தேதி தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
 
இந்நிலையில் பா.ஜ.க. தேசிய பொதுச்செயலாளர் முரளிதர் ராவ் இன்று பெங்களூருவில் பேசிய போது, காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மற்றும் பா.ஜ.க.வின் பங்கு பெரிய அளவில் உள்ளது. இந்த விவகாரத்தில் கர்நாடகாவுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் பா.ஜ.க ஒருபோதும் செயல்படாது என தெரிவித்துள்ளார்.
கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு பா.ஜ.க. காய்நகர்த்தி வருவதாக குற்றம் சாட்டப்படும் நிலையில், கர்நாடகாவுக்கு ஆதரவாக முரளிதர ராவ் பேசியிருப்பது தமிழக விவசாயிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.