குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம். எச்.ராஜா
சமீபத்தில் மனுஷ்யபுத்திரன் எழுதிய ஒரு கவிதைக்கு பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தனது டுவிட்டரில் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். இதுகுறித்து இருவருமே நெட்டிசன்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் தொடர்ந்து தொலைபேசி மூலம் மிரட்டப்படுவதாகவும், ஆபாச வசைகள் தொடர்வதாகவும், இதற்கு எச்.ராஜா பின்புலத்தில் உள்ளதாகவும் சுப.வீரபாண்டியன் தனது டுவிட்டரில் கூறியுள்ளது. மேலும் உடனே கொலை மிரட்டல் வழக்கில் ஹெச்.ராஜா கைது செய்யப்பட வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதற்கு தனது டுவிட்டரில் பதிலளித்த எச்.ராஜா, 'குத்தாலத்தில் இடி இடித்தால் கும்பகோணத்தில் விளக்கு அணையுமாம் என்று கூறியுள்ளார்.