வெள்ளி, 5 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 3 டிசம்பர் 2025 (12:39 IST)

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!

பிரதமர் மோடி டீ விற்பது போன்ற AI கேலி வீடியோ.. காங்கிரஸ் கட்சிக்கு பாஜக கடும் கண்டனம்!
பிரதமர் நரேந்திர மோடி சிவப்பு கம்பள நிகழ்வில் தேநீர் விநியோகிப்பது போன்ற AI-உருவாக்கிய வீடியோவை காங்கிரஸ் தலைவர் ராகினி நாயக் பகிர்ந்துள்ளதால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்தப் பதிவை "இதை இப்போது யார் செய்தது?" என்ற தலைப்புடன் ராகினி நாயக் வெளியிட்டார்.
 
இதற்குப் பதிலளித்த பாஜக செய்தித் தொடர்பாளர் ஷேசாத் பூனாவாலா, "ஆடம்பர எண்ணம் கொண்ட காங்கிரஸ், சாதாரண பின்னணியில் இருந்து வந்த ஓபிசி சமூகத்தை சேர்ந்த உழைக்கும் பிரதமரை ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் பிரதமரின் 'சாய்வாலா' பின்னணியை கேலி செய்துள்ளனர்," என்று குற்றம் சாட்டினார். இது, பிரதமரை 150 முறைக்கு மேல் தவறாக பேசியதோடு, அவரது தாயாரை இழிவுபடுத்திய முந்தைய AI வீடியோ தாக்குதலின் தொடர்ச்சி என்றும் அவர் கண்டித்தார்.
 
மத்தியில் ஆளும் கட்சி, பிரதமரின் எளிமையான பின்னணியை அரசியல் ரீதியாக கேலி செய்ய AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது ஆரோக்கியமற்ற அரசியல் என்றும், இதனை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள் என்றும் பாஜக தெரிவித்துள்ளது. 
 
ஏற்கெனவே பீகார் காங்கிரஸ் வெளியிட்ட மோடியின் தாயார் குறித்த AI வீடியோவை பாட்னா உயர் நீதிமன்றம் நீக்க உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Siva