வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 11 ஏப்ரல் 2024 (13:34 IST)

பாஜக ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம் தொடங்கப்படும்; தேர்தல் அறிக்கையில் அறிவிப்பு

சிக்கிம் மாநிலத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் அம்மா உணவகம் தொடங்கப்படும் என அக்கட்சியின் தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
நடைபெறவுள்ள மக்களவை தேர்தலுடன் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பிரச்சாரம் செய்து வருகின்றன.
 
இந்நிலையில் சிக்கிம் சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா சற்றுமுன் வெளியிட்டார. அதில் சிக்கிமில் பெண்களால் நடத்தப்படும் 'அம்மா கேன்டீன்' என்ற மலிவு விலை உணவகம் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும் சிக்கிம் மாநிலத்தில் ஐ.ஐ.எம். கல்வி நிறுவனம் தொடங்கப்படும் என வாக்குறுதி கொடுத்துள்ள பாஜக, இளைஞர்களுக்கு அதிகாரம், சுற்றுலா துறை ஊக்குவிப்பு உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை பாஜக அறிவித்துள்ளது.
 
Edited by Siva