1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : வியாழன், 13 டிசம்பர் 2018 (13:10 IST)

உலகின் மிக ஆபத்தான விமான நிலையம் ! சுவாரஸ்ய தகவல்...

உலகம் பரிணாமத்தின் பாதையில் பயணிக்க இந்த உலகம் இன்று கைகளுக்குள் சுறுங்கி விட்டது. ஆனால் இதில் ஆச்சர்யமூட்டும் விசயங்களும் உண்டு. 
ஆம்! உலகிலுள்ள ஆபத்தான விமான நிலையங்களுள் ஒன்றுதான் நன் அண்டை நாடான நேபாளத்திலுள்ள லுக்லா விமான நிலையம் ஆகும்.
 
இந்த விமான நிலையம்  எவரெஸ்ட் சிகரத்தின் அடிப்பகுதியில் கிட்டத்தட்ட 2 ஆயிரத்து 600 மீட்டர் உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. 
 
இதில் மிகவும் சிறிய வடிவிலான விமானங்கள் மட்டுமே தரையிரங்க முடியுமாம். சுமார் 17923 அடி நீளம் கொண்ட ஓடுதளத்தில் விமானங்கள் தரையிறங்கும் போது அல்லது மேலே எழும்பும் போது சிறுது கவனம் சிதறினாலும் அசந்தர்ப்பாக இருந்தாலும் 2000 அடி ஆழ பள்ளத்தாக்கில் விழ வாய்ப்புள்ளது  என்பது கேட்பதற்கே இவ்வளவு டெரராக உள்ளது என்றால் இங்கே பயணம் செய்பவர்களுக்கு எப்படி இருக்கும்..?
 
ஆனாலும் சாகச விரும்பிகள் மற்றும் புதுமை விரும்பிகள் இங்கே பயணம் மேற்கொள்ள தவறுவதில்லை.