திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 26 டிசம்பர் 2023 (10:20 IST)

பொது சிவில் சட்டம்: பாஜக ஆட்சி செய்யும் 10 மாநிலங்களில் அமல்படுத்த தீவிரம்..!

இந்தியாவில் பொது சிவில் சட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும் என்று மத்திய பாஜக அரசு ஏற்கனவே தெரிவித்துள்ள நிலையில் தற்போது நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதை அமல்படுத்த தீவிர முயற்சி எடுத்து வருவதாக கூறப்படுகிறது.
 
சமீபத்தில் ஐந்து மாநில தேர்தலில் 3 மாநிலங்களில்  பாஜக வெற்றி பெற்ற நிலையில் தற்போது பாஜக ஆட்சி செய்து வரும்  10 மாநிலங்களில் இந்த பொது சிவில் சட்டத்தை அமலுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.  

நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் முதல் கட்டமாக பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய பாஜக அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

இதில் கிடைக்கும் ஆதரவு மற்றும் எதிர்ப்புகளை கணக்கில் கொண்டு அதன் பின்னர் இந்த சட்டத்தை உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், ராஜஸ்தான் உள்பட பாஜக ஆளும் 10 மாநிலங்களில் நடைமுறைப்படுத்த தீவிரம் காட்டி வருகிறது.

Edited by Mahendran