திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 25 ஜனவரி 2022 (10:12 IST)

சாலை விபத்தில் பாஜக எம்.எல்.ஏ மகன் உயிரிழப்பு: அரசியல் பிரபலங்கள் இரங்கல்!

சற்று முன் நிகழ்ந்த சாலை விபத்தில் பாஜக மகன் உள்பட 7 பேர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
 
மகாராஷ்டிர மாநிலத்தில் உள்ள பாஜக எம்எல்ஏ விஜய் ரகந்தலே  மகன் உள்பட 7 பேர் வாகனம் ஒன்றில் சென்று கொண்டிருந்த நிலையில் திடீரென அவர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது
 
 இதனை அடுத்து பாஜக எம்எல்ஏ விஜய் ரகந்தலே மகன் உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த நிலையில் இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட காவல்துறையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர்
 
பாஜக எம்எல்ஏ மகன் உயிரிழந்ததை அடுத்து அரசியல் பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது