1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 3 ஜூன் 2017 (11:44 IST)

பாஜக தலைமைக்கு எதிர்ப்பு: மேகாலய பாஜக தலைவர் ராஜிமானா!!

மாட்டிறைச்சி விவகாரத்தில் பாஜக தலைமைக்கு எதிர்ப்பு தெரிவித்து, மேகாலயா மாநில பாஜக தலைவர் ராஜினாமா செய்துள்ளார்.


 
 
பசு, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிகாக வாங்கவோ விற்கவோ கூடாது என மத்திய அரசு தடை உத்தரவை பிறபித்துள்ளது. 
 
இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மேகாலய மாநிலத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. அம்மாநிலத்தின் பெரும்பான்மையான மக்கள் மாட்டிறைச்சி உண்பதால், இந்த தடை விதிப்பது சரியாக வராது என்று பெர்னார்ட் தெரிவித்தார். 
 
ஆனால், பாஜக மேலிடம் இதற்கு உடன்படவில்லை. என்வே, பெர்னார்ட் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்வதாகக் கூறி கடிதம் ஒன்றை கட்சித் தலைமைக்கு அனுப்பியுள்ளார். இது கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.