மே 29 - 31 - கொரோனா தமிழகத்தையே திருப்பி போடும் நாட்களா??

Sugapriya Prakash| Last Modified புதன், 19 மே 2021 (09:35 IST)
தமிழகத்தில் மே 29 - 31 ஆம் தேதிக்குள் கொரோனா பரவல் உச்சத்தை தொடும் என மத்திய அரசு ஆய்வில் தகவல். 

 
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை எட்டி தற்போது மெல்லமாக குறையத் துவங்கியுள்ளது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 4 லட்சம் வரை இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 2.63 லட்சமாக குறைந்துள்ளது. இருப்பினும், தற்போது வரை தமிழத்தில் கொரோனா பாதிப்பு ஏறுமுகமாகவே இருக்கிறது.  
 
ஆம், நேற்று ஒதே நாளில் தமிழகத்தில் 33,000 பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். இந்நிலையில், அடுத்த 2 வாரங்களில், குறிப்பாக தமிழகத்தில் மே 29 ஆம் தேதியில் இருந்து 31-க்குள் கொரோனா உச்சம் தொட்டு பின்னர் குறையும் என்றும் புதுச்சேரியில் அடுத்த இரு நாளுக்குள் கொரோனா உச்சம் தொடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மேலும் படிக்கவும் :