திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 29 மார்ச் 2023 (07:54 IST)

இந்தியாவின் ஒரே பான் இந்தியா கட்சி பாஜக தான்: பிரதமர் மோடி பெருமிதம்..!

பாஜக மட்டுமே இந்தியாவின் ஒரே பான் இந்தியா கட்சி என பிரதமர் மோடி பெருமிதத்துடன் கூறியுள்ளார். டெல்லியை நேற்று பாஜக புதிய அலுவலக கட்டடத்தை திறந்து வைத்த பிரதமர் மோடி அந்த நிகழ்ச்சியில் பேசியபோது ஒரு சிறிய அரசியலமைப்பாக இருந்து இன்று உலகின் மிகப்பெரிய அமைப்பாக பாஜக உயர்ந்துள்ளதற்கு கட்சி தொண்டர்களின் அர்ப்பணிப்புதான் காரணம் என்று தெரிவித்தார். 
 
தனது போட்டியாளர்களின் குறைகளை கண்டுபிடிப்பதற்கு பதிலாக எல்லா முரண்பாடுகளையும் தைரியமாக எதிர்த்து மக்கள் பணியில் களத்தில் நின்றதால் தான் குடும்ப அரசியல் கட்சியை மக்கள் ஒதுக்கிவிட்டு பாஜகவை மக்கள் தேர்வு செய்துள்ளனர் என்றும் இந்தியாவில் பாஜக மட்டும் தான் ஒரே ஒரு பான் இந்தியா கட்சியாக உருவெடுத்துள்ளது என்று தெரிவித்தார் 
 
கடந்த 1984 ஆம் ஆண்டு இரண்டு மக்களவைத் தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 2019 ஆம் ஆண்டில் 33 தொகுதிகளையும் பல மாநிலங்களில் 50% வாக்குகளை பெற்று உள்ளது என்று தெரிவித்தார். கிழக்கிலிருந்து மேற்கு வரை வடக்கிலிருந்து தெற்கு வரை இருக்கும் ஒரே கட்சி பாஜக தான் என்பதால் இதுவொரு பான் இந்தியா கட்சியாக  உருவெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
 
 
Edited by Siva