வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 7 ஜனவரி 2019 (11:49 IST)

கிச்சடியில் கின்னஸ் சாதனை – டெல்லியில் பாஜக அதிரடி ?

டெல்லியில் நேற்று நடைபெற்ற பேரணி ஒன்றிற்காக 5000 கிலோ கிச்சடியைப் பாஜக சார்பில்  சமைத்துக் கின்னஸ் சாதனையாக்க முயற்சி செய்துள்ளனர்.

டெல்லியில் நேற்று பாஜக சார்பில் பேரணி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்நிகழ்விற்கு பாஜக வின் தேசியத் தலைவர் அமித ஷா தலைமைத் தாங்கினார். இந்த விழாவில் கலந்து கொள்பவர்களுக்குக் கொடுப்பதற்காக பாஜக சார்பில் 5000 கிலோ கிச்சடி தயாரிக்கப்பட்டது.

பாஜக வின் ஆட்சி தலித் மற்றும் சிறுபாண்மையின மக்களுக்கு எதிரானதாக இருப்பதாக  பாஜக மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டு வேளையில் அதைப் போக்கும் விதமாக இந்த உணவுக்கான பொருட்களான அரிசி, பருப்புப் போன்ற பொருட்களை தலித்துகளிடம் இருந்து பெற்றதாகக் கூறப்படுகிறது.

டெல்லி ராமலீலா மைதானத்தில் நடைபெற்ற  'பீம் மகாசங்கம் விஜய் சங்கல்ப' பேரணியில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாரான இந்த கிச்சடியை கின்னஸ் சாதனையில் இடம்பெற வைக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. இதற்காக 20 அடி விட்டம், 6 அடி ஆழம் கொண்ட பாத்திரம் பயன்படுத்தப்பட்டது. இதை நாக்பூர் சமையல் கலைஞர் விஷ்ணு மனோகர் சமைத்தார்.

இதற்கு முன்னர் பிரபல சமையல் கலைஞர் சஞ்சீவ் கபூர் சமைத்த 918.8 கிலோ கிச்சடி உலக சாதனையாக  இருந்து வந்துள்ளது. அதை முறியடிக்கும் விதமாக 5000 கிலோ கிச்சடி சமைக்கும் நிகழ்வை பாஜகவின் தாழ்த்தப்பட்டோர் அணி நடத்தியுள்ளது.