1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 5 ஜனவரி 2019 (13:35 IST)

ஆம்பளையா இருந்தா பஸ்ச தொட்டு பாரு வே: பாஜகவினரை அலறவிட்ட சிங்கம் போலீஸ்; பாராட்டிதள்ளும் மலையாளிகள்

கேரள பேருந்தை தாக்க முயன்ற பாஜகவினரை தனது மிரட்டலால் துரத்திய தமிழக போலீஸ்காரருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.
கடும் எதிர்ப்பையும் மீறி பெண்கள் சபரிமலைக்குள் நுழைந்ததால் கேரளா மட்டுமல்லாது, தமிழக கேரள எல்லையான களியக்காவிளையில் போராட்டம் நடைபெற்றது. அங்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த பாஜகவினர் கேரளாவில் வந்த பேருந்தை வழிமறித்து, அந்த பேருந்தின் டிரைவரை தாக்க முற்பட்டனர்.
 
அப்போது அங்கு வந்த காவல் உதவி ஆய்வாளர், மோகன அய்யர், பேருந்து ஓட்டுநரை தாக்க முயன்ற பாஜகவினரை கண்டமேனிக்கு வறுத்தெடுத்தார். அவ்வளவு பெரிய ஆளா நீங்கள், சண்டை போடுறதுன்னா பார்டர்ல போய்ட்டு சண்ட போங்க என பேசினார். பின்னர் அங்கிருந்த பேருந்து பத்திரமாக அனுப்பி வைக்கப்பட்டது. போலீஸ்காரரின் இந்த அதிரடி நடவடிக்கையை பார்த்து வியந்துபோன கேரள மக்கள், காவலர் மோகன அய்யரை பாராட்டி வருகின்றனர்.