1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 2 ஆகஸ்ட் 2021 (14:09 IST)

வோடோபோனுக்கு என்ன ஆச்சு? திடீரென விலகும் முக்கிய பங்குதாரர்!

வோடபோனில் இருந்து அதன் முக்கிய பங்குதாரர் திடீரென விலக விலக விருப்பம் தெரிவித்ததை அடுத்து வோடபோன் தத்தளித்து வருவதாக கூறப்படுகிறது
 
ஏற்கனவே வோடபோன் நிறுவனம் 1.8 லட்சம் கோடி கடனில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வோடபோன் நிறுவனத்தின் 27 சதவீத பங்குகளை வைத்துள்ள பிர்லா நிறுவனம் வோடோபோனில் இருந்து விலக விருப்பம் தெரிவித்துள்ளது 
 
வோடோன்போன் ஐடியா நிறுவனத்தில் இருந்து விலக விரும்புவதாகவும் அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் அதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் பிர்லா நிறுவனத்தின் குமாரமங்கலம் பிர்லா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்
 
இதுகுறித்து அவர் அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளதாகவும் அந்த கடிதத்தில் வோடோன்போன் நிறுவனத்தைக் காப்பாற்ற வேண்டுமானால் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இல்லாவிடில் வோடபோன் நிறுவனம் கவிழ்ந்து விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார் 
 
இதனை அடுத்து அரசு நடவடிக்கை எடுத்து வோடபோன் நிறுவனத்தை காப்பாற்றுமா அல்லது ஏர்செல் போலவே வோடபோன் நிறுவனமும் இழுத்து மூடப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்