பாதாளத்திற்கு பாய்ந்த அதானி பங்குகள்; பணக்காரர் அந்தஸ்தை இழந்த அதானி!

Adaani
Prasanth Karthick| Last Modified வெள்ளி, 18 ஜூன் 2021 (10:36 IST)
இந்தியாவின் பிரபல பணக்காரர்களில் ஒருவரான அதானி குழுமத்தின் பங்குகள் வீழ்ச்சியடைந்ததை தொடர்ந்து ஆசியாவின் 2வது பணக்காரர் அங்கீகாரத்தை அதானி இழந்தார்.

கடந்த சில நாட்களாக அதானி குழுமத்தின் பல்வேறு நிறுவனங்களின் பங்குகள் வேகமாக அதிகரித்து வந்தன. அதை தொடர்ந்து பல முதலீட்டாளர்கள் அதானி நிறுவனத்தில் முதலீடு செய்தனர்.

இந்நிலையில் அதானியின் நிறுவன பங்குகளில் அதிக முதலீடு செய்திருக்கும் 3 வெளிநாட்டுக் கணக்குகளை தேசிய பங்குகள் வைப்பு நிறுவனமான NSDL முடக்கியுள்ளதாக செய்தி வெளியானது. இச்செய்தி வெளியானதில் இருந்து அதானி குழும பங்குகள் தொடர்ந்து சரிந்து வருகிறது.

இந்த செய்தியால் கடந்த 3 நாட்களில் அதானி குழுமத்தின் மதிப்பு ரூ.66,681 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆசியாவின் இரண்டாவது பெரிய பணக்காரர் என்னும் அந்தஸ்தை இழந்து மூன்றாம் இடத்திற்கு அதானி தள்ளப்பட்டுள்ளார்.இதில் மேலும் படிக்கவும் :