மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு ரத்து
மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியுள்ள ஒமிக்ரான் வேரியண்ட் உலக நாடுகளை மீண்டும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களிலும் ஒமிக்ரான் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் பல்வேறு மாநிலங்களிலும் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்தியாவில் 23 மாநிலங்களில் ஒமிக்ரான் கண்டறியப்பட்ட நிலையில், இதுவரையிலான மொத்த கொரோனா பாதிப்புகள் 1,700 ஆக பதிவாகியுள்ளன. ஓமிக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 639 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 1,061 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் மத்திய அரசின் ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒமிக்ரான் பரவல் காரணமாக மத்திய அரசின் அதிகாரிகள், பணியாளர்களுக்கான பயோ மெட்ரிக் வருகைப்பதிவு ரத்து செய்யப்பட்டுள்ளது. இது ஒரு தற்காலிகமான நடவடிக்கை எனவும் கூறப்பட்டுள்ளது.