புதன், 13 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 மார்ச் 2022 (12:48 IST)

வாகன காப்பீடு கட்டணமும் உயர்வு..! – அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்!

இந்தியாவில் பெட்ரோல் விலை உயரலாம் என அஞ்சப்படும் நிலையில் வாகன காப்பீடு கட்டணம் உயர்வதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

உக்ரைனில் போர் நடந்து வருவதால் பங்குசந்தை வீழ்ச்சி, தங்கம், கச்சா எண்ணெய் விலை உயர்வு என மக்கள் பெரும் சிக்கலுக்கு உள்ளாகியுள்ளனர். இந்தியாவில் சட்டமன்ற தேர்தல் காரணமாக பெட்ரோல் விலை உயராமல் இருந்து வந்த நிலையில், கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை உயரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் வாகனங்களுக்கான மூன்றாம் நபர் காப்பீடு பிரிமீயத்தை ஏப்ரல் 1 முதல் உயர்த்த உள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுவரை இருசக்கர வாகனங்களுக்கான ப்ரீமியம் 11 சதவீதமாக இருந்த நிலையில் 20 சதவீதம் வரை உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து இருசக்கர வாகனம் தொடர்பானவை விலை உயர்வை சந்தித்து வருவது வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.