செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 4 ஆகஸ்ட் 2021 (21:54 IST)

பீகார் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு!

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் மூன்றாவது அலை ஆகஸ்டில் தொடங்கி அக்டோபர் மாதம் உச்சம் பெறும் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் ஒரு சில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கும் பணிகள் தொடங்கி விடுகின்றன
 
ஏற்கனவே இந்தியாவின் முதல் மாநிலமாக பஞ்சாப் மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் அடுத்ததாக தற்போது பீகாரில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
 
பீகாரில் 9 மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கு வரும் ஆகஸ்ட் 7ம் தேதியும் ஒன்று முதல் எட்டாம் வகுப்புகளுக்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியும் பள்ளிகள் செயல்படும் என பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார் 
 
மேலும் பள்ளிகளுக்கு மாணவர்களை வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் பெற்றோரிடம் கண்டிப்பாக ஒப்புதல் கடிதத்தை மாணவர்கள் பெற்று வர வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது