புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: செவ்வாய், 21 ஜூலை 2020 (10:52 IST)

வனிதா பற்றி இனி நியூஸ் வெளியிடமாட்டோம் – இணையதள சேனல் அறிவிப்பு!

வனிதா மூன்றாவது திருமணம் பற்றி இனி செய்தி வெளியிடமாட்டோம் என இணையதள சேனல் ஒன்று அறிவித்துள்ளது.

வனிதா மற்றும் பீட்டர்பால் மூன்றாம் திருமணம் மற்றும் பீட்டர்பால் முதல்  மனைவியின் சர்ச்சை ஆகியவை அனைத்து ஊடகங்களிலும் பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து தற்போது இந்த விவகாரம் குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் மற்றும் வனிதா இருவரும் பிரபல இணையதள சேனல் ஒன்றிற்கு லைவ் பேட்டி கொடுத்தனர்.

பேட்டியின் ஆரம்பம் முதலே கோபமாக பேசிய வனிதா ஒரு கட்டத்தில் லட்சுமி ராமகிருஷ்ணனையும் சம்மந்தப்பட்ட சேனல் ஆங்கரையும் பதில் சொல்ல முடியாத அளவுக்கு கேள்விகள் கேட்டு திணறடித்தார். ஒரு கட்டத்தில் இருவருமே பதில் சொல்ல முடியாமல் ஆஃப்லைனுக்கு சென்றுவிட அந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆக வனிதாவுக்கு பாராட்டுகளும் குவிய ஆரம்பித்தன.

மேலும் லஷ்மிராமகிருஷ்ணன் மற்றும் அந்த சேனல் இருவரையும் அடுத்தவர்களின் பர்சனல் விஷயத்தில் தலையிட நீங்கள் யார் ஜட்ஜா? என்ற கேள்வி இணையத்திலும் எழுப்பப்பட்டது. இதைத்தொடர்ந்து அந்த சேனலி நெட்டிசன்கள் ட்ரோல் செய்ய, அந்த சேனல் இனிமேல் வனிதா பற்றி செய்தி வெளியிட மாட்டோம் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.