5 வயது சிறுமியை கடத்தி வன்கொடுமை செய்து கொலை! – கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்!
கேரளாவில் 5 வயது சிறுமியை நபர் ஒருவர் கடத்தி வன்கொடுமை செய்து கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரளா மாநிலம் ஆலுவா பகுதியில் பீகாரை சேர்ந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கி கூலி வேலைகள் செய்து வருகின்றன. அந்த பகுதியில் இருந்த பீகாரில் இருந்து வந்த கூலித் தொழிலாளி தம்பதியரின் 5 வயது பெண் குழந்தை திடீரென காணாமல் போனது.
இதுகுறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்ட நிலையில் அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சிசிடிவி காட்சிகள் மூலம் சிறுமியை அதே பகுதியை சேர்ந்த பீகார் தொழிலாளி அஷ்பக் ஆலம் என்பவர் கடத்தி சென்றது தெரிய வந்துள்ளது.
அதையடுத்து அஷ்பக் ஆலத்தை கைது செய்து விசாரித்தபோது அவர் அந்த சிறுமியை கடத்தி சென்று பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்து தூக்கி வீசிய சம்பவம் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக போக்சோ, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் கீழ் அஷ்பக் ஆலம் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் கேரளாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Edit by Prasanth.K