வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 29 ஜூலை 2019 (13:39 IST)

எருமை மாட்டு கொம்பை பாலிஷ் செய்ததில் ஊழல்.. முன்னாள் முதல்வர் மீது எழுந்த வேடிக்கையான குற்றச்சாட்டு

பீகாரின் முன்னாள் முதல்வர், எருமை மாட்டுக் கொம்பை பாலிஷ் செய்வதாக கூறி ஊழல் செய்ததாக ஒரு குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பீகாரில் தற்போது முதலமைச்சராக இருக்கும் நிதிஷ் குமாரின் அரசு, முந்தைய பீகார் அரசுகளில் நடந்த ஊழல் குறித்த விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த விசாரணையில், கடந்த லாலு பிரசாத் யாதவின் ஆட்சியின் போது, எருமை மாடுகளின் கொம்புகளை பாலிஷ் செய்ய கடுகு எண்ணெய் வாங்கியதாக கூறி 17 லட்சம் மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 1995-97 ஆண்டுகள் வரை, பீகாரில் முதல்வராக இருந்த லாலு பிரசாத் யாதவ், மாட்டுத் தீவனம் வாங்கியதில் ஊழல் செய்ததாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்நிலையில் தற்போது லாலு பிரசாத் எருமை மாட்டின் கொம்பை பாலிஷ் செய்வதாக கூறி ஊழல் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 1995-96 ஆண்டுகளில், லாலு பிரசாத் ஆட்சியில், அரசு கருவூலத்தில் இருந்து எடுக்கப்பட்ட ரூ.116 கோடி எங்கு சென்றது என்பதற்கான ஆவணம் எதுவும் இல்லை எனவும் தற்போதய பீகார் அர்சு அதனைக் குறித்து கேள்விகளை எழுப்பியுள்ளது.