செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 18 ஜனவரி 2022 (13:01 IST)

5 டோஸ் தடுப்பூசி போட்டு கொண்ட டாக்டர் மீது விசாரணை!

இந்தியாவில் உள்ள பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்படுத்த 2 டோஸ் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வரும் நிலையில் பீகாரை சேர்ந்த டாக்டர் ஒருவர் 5 டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்டு இருப்பதாக வெளிவந்த தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
பீகார் மாநிலம் பாட்னா என்ற பகுதியைச் சேர்ந்த டாக்டர் விபின் குமார் சிங் என்பவர் இதுவரை 5 டோஸ் தடுப்பூசி செய்துகொண்டதாக பதிவுகளின் மூலம் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து விதிகளை மீறி ஐந்து முறை தடுப்பு ஊசி செலுத்திய டாக்டர் மீது விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது
 
2 டோஸ் மற்றும் பூஸ்டர் தடுப்பூசி மட்டுமே செலுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ஒரே நபர் எப்படி ஐந்து டோஸ் செலுத்தினார்? ஆதார் மற்றும் பான் கார்டு விவரங்களை தவறாக பயன்படுத்தினார் என்பது குறித்து விசாரணை செய்ய அதிகாரிக்கு உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது