திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஜூலை 2020 (19:12 IST)

முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த உறவினருக்கு கொரோனா பாதிப்பு: அதிர்ச்சி தகவல்

தமிழகம் உள்பட இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாளொன்றுக்கு சுமார் 20 ஆயிரம் பேர் வரை கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர் 
 
இதனை அடுத்து உலகில் கொரோனா வைரஸ் பாதித்த நாடுகளின் பட்டியலில் இந்தியா மூன்றாவது இடத்திற்கு தற்போது முன்னேறி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ் நாட்டில் அப்பாவி மக்களை மட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களையும் கடந்த சில நாட்களாக பாதிப்பு ஏற்படுத்தி வருவதை பார்த்து வருகிறோம்
 
அந்த வகையில் தற்போது பாட்னாவில் உள்ள பீகார் மாநில முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த முதல்வர் நிதிஷ்குமாரின் உறவினர் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு உறுதி என்ற தகவல் வெளிவந்துள்ளது. இதனால் முதல்வர் இல்லத்தில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது 
 
முதல்வர் இல்லத்தில் தங்கியிருந்த ஒருவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டதால் முதல்வர் உள்பட முதல்வரின் வீட்டில் உள்ள அனைவருக்கும் கொரோனா வைரஸ் சோதனை செய்யப்படும் என்று அம்மாநில சுகாதாரத்து அறிவித்துள்ளது