பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது மர்மநபர் தாக்குதல்: அதிர்ச்சி தகவல்
பலத்த பாதுகாப்பையும் மீறி பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மீது மர்ம நபர் ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிகார் முதல்வர் நிதீஷ் குமார் தற்போது மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த நிலையில் அவர் தனது சொந்த கிராமமான பக்தியார்பூர் என்ற பகுதியில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் ஒன்றை திறக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்
இந்த நிகழ்ச்சியில் அவர் சிலையை திறந்து கொண்டிருந்தபோது திடீரென பின்னால் வந்த ஒரு மர்ம நபர் முதல்வர் நிதீஷ் குமாரை தாக்கினார். இதனையடுத்து அந்த பகுதியில் இருந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்
முதல்கட்ட விசாரணையில் அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என தெரியவந்து உள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்