1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva

முதல்முறை எம்.எல்.ஏ, அமைச்சராக கூட இல்லாதவர் குஜராத் முதல்வராக தேர்வு!

முதல்முறை எம்.எல்.ஏ, அமைச்சராக கூட இல்லாதவர் குஜராத் முதல்வராக தேர்வு!
முதல் முறை எம்எல்ஏவாக இருந்தவரும் இதற்கு முன்னர் அமைச்சர் பதவியில் கூட இருந்து அனுபவமில்லாத ஒருவர் குஜராத் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது குஜராத் எம்எல்ஏக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
குஜராத் முதல்வராக இருந்தவர் விஜய் ரூபானி. இவர் திடீரென ராஜினாமா செய்ததை அடுத்து புதிய முதல்வரை தேர்வு செய்யும் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 112 பாஜக எம்எல்ஏக்கள் கலந்து கொண்டனர்
 
இந்த கூட்டத்தில் பூபேந்திர பட்டேல் ஒரு மனதாக முதல்வராக தெரிவு செய்யப்பட்டார். இது அனைவருக்கும் பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.  பூபேந்திர பட்டேல் இதற்கு முன்னர் அமைச்சராக இருந்த அனுபவம் இல்லை என்பதும் இப்போது தான் முதல் முறையாக அவர் எம்எல்ஏ ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
முதல்முறையாக எம்எல்ஏ ஆனவர் குஜராத் மாநிலத்தின் முதல்வராக தேர்வு செய்யப்பட்டிருப்பது பாஜக வட்டாரத்தில் மட்டுமின்றி அரசியல் வட்டாரத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. குஜராத்  மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது