1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2024 (11:12 IST)

Bhakra-Nangal Free Train: 75 வருடமாக இலவசமாக இயங்கும் ரயில்.. இந்தியாவில் இப்படி ஒரு ரயில் இருக்கா?

Bhakra Nangal Train

Bhakra-Nangal Train: India’s 75 years old free train service: இந்தியாவில் ரயிலில் டிக்கெட் எடுக்காமல் ஏறினாலே அபராதம் விதிக்கும் இந்த காலத்திலும் டிக்கெட்டே எடுக்காமல் ஒரு ரயிலில் பயணிக்க முடியும் என்றால் நம்ப முடிகிறதா?

 

 

இந்தியா முழுவதும் இந்திய ரயில்வே துறையின் பல்வேறு வழித்தடங்களில் ஏராளமான ரயில்கள் செயல்பட்டு வருகின்றன. நிர்வாக வசதிக்காக மத்திய ரயில்வே, தெற்கு ரயில்வே, வடக்கு ரயில்வே என பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றன. பிரிட்டிஷ் காலத்தில் ரயில் சேவைகள் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டாலும், இந்தியா சுதந்திரமடைந்த பின்னரே ரயில்வே துறையில் அசுரகதியான பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

 

அப்படியான மாற்றங்களுக்கு உள்ளானாலும் தொடர்ந்து 75 ஆண்டுகளாக இந்தியாவில் ஒரு ரயில் சேவை மட்டும் டிக்கெட் இல்லாமல் இலவச பயணத்தை அளித்து வருகிறது என்றால் நம்ப முடிகிறதா?

 

ஆம், இமாச்சல பிரதேசத்தின் பக்ரா தொடங்கி, பஞ்சாபின் நங்கல் வரை பயணிக்கும் பக்ரா - நங்கல் ரயில் கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக இலவசமாக பயணிகளை ஏற்றி சென்று வருகிறது. 13 கிலோ மீட்டர்களுக்கு பயணிக்கும் இந்த ரயில் சேவை முதன்முதலில் 1948ல் தொடங்கப்பட்டது.

 

Bhakra Nangal Train View
Bhakra Nangal Train View
 

பக்ரா நங்கல் (Bhakra-Nangal Train) ரயில் சேவை உருவானது எப்படி?

 

சட்லஜ் ஆற்றில் கட்டப்பட்டு வந்த பக்ரா - நங்கல் அணையின் கட்டுமான பணிகளுக்காக பொருட்களை கொண்டு செல்லவும், பணியாட்களை ஏற்றி செல்லவும் இந்த ரயில் ஆரம்பத்தில் பயன்பட்டது. இந்த ரயில் சேவை Bhakra Beas Management Board (BBMB) கட்டுப்பாட்டில் இன்றும் இயங்கி வருகிறது. ஆரம்பத்தில் தொழிலாளர்கள் வசதிக்காக இலவசமாக இயக்கப்பட்ட இந்த ரயில் கட்டுமான பணிகள் முடிந்த பின்னரும் கூட மக்கள் வசதிக்காக BBMB-யால் இலவசமாகவே இயக்கப்பட்டு வருகிறது.

சுற்றுலா பயணிகளின் விருப்பமான ரயில்!

 

முதலில் நீராவி எஞ்சினில் செயல்பட்ட இந்த ரயில் பின்னர் டீசல் எஞ்சினுக்கு மாற்றப்பட்டது. இன்று வரை தொடர்ந்து டிக்கெட் கட்டணம் ஏதுமின்றி இலவசமாக செயல்படும் இந்த ரயிலில் 800 பேர் வரை பயணிக்கின்றனர். இந்த ரயிலில் பயணிக்கும் 13 கிலோ மீட்டரில் அழகான நீளமான சட்லெஜ் ஆறு, பக்ரா நங்கல் அணை, ஷிவாலிக் மலைத்தொடர் என ரம்மியமான இயற்கை காட்சிகளை கண்டு களிக்க முடியும். தற்போது அப்பகுதியில் சுற்றுலா செல்பவர்கள் முதல் சாய்ஸாக இந்த ரயில் பயணம் இருக்கிறது. இந்தியாவின் டிக்கெட் இல்லாத ஒரே ரயில் சேவையாக இன்றும் தொடர்ந்து வருகிறது.

 

Edit by Prasanth.K