செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 14 மே 2019 (12:00 IST)

கரடிக்குட்டியை தாக்கும் மனித மிருகங்கள்: நெஞ்சை பதர வைக்கும் வீடியோ!

மனித மிருகங்கள் சிலர் கரடிக்குட்டியை தாக்கி அதனை கீழே விழ வைக்கும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளது. 
 
ஜம்மு காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. பிரவுன் நிற கரடிக்குட்டி ஒன்று மலை மீது ஏறி வர முயற்சிக்கிறது. ஆனால், மலை மேல் இருக்கும் சில இளைஞர்கல் அதன் மீது கல்லை தூக்கி எறிகின்றனர். 
 
இதனால், தடுமாறும் அந்த கரடிக்குட்டு ஒரு கட்டத்தில் மலையில் இருந்து கீழே விழுந்து கடைசியில் பரிதாபமாக ஆற்றுக்குள் விழுந்து விடுகிறது. கரடிக்குட்டி விழுந்ததும் அந்த இளைஞர்கள் ஆர்பரிக்கின்றனர். 
 
இந்த வீடியோ முகமது-அ-ஷா என்பவரது ட்விட்டர் கணக்கில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவை பலர் பகிர்வதோடு இந்த மனிதர்களின் கொடூரமான செயல்களுக்கு கண்டனம் தெரிவித்தும் வருகின்றனர்.