1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 22 ஏப்ரல் 2019 (19:57 IST)

கூந்தலை விற்று தேவையை பூர்த்தி செய்யும் பெண்கள்

ஏராளமான சுற்றுலா தளங்களைக் கொண்ட நாடு வெனிசுலா ஆகும். உலகில் மிக உயரமாக நீர்வீழ்ச்சி இந்நாட்டில் அமைந்துள்ளது. தற்போது வெனிசுலா நாட்டில் உள்நாட்டுக் குழப்பம் பொருளாதாரா நெருக்கடி நிலவுகிறது.
இந்நிலையில் அந்நாட்டில் வசிக்கிற இளம் பெண்கள் தங்கள் கூந்தலை விற்று தங்களின் சொந்த தேவைகளை நிறைவேற்றிக்கொள்கின்றனர்.
 
வெனிசுலாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் முறைகேடாக வெற்றிபெற்றதாக அதிபர் நொக்கோலஸ் மதுரோ மீது குற்றம்சாட்டிய எதிர்க்கட்சித் தலைவர் தன்னைத்தானே அதிபராக அறிவித்துக் கொண்டார்.
 
இதனால் தற்போது இங்கு கடும் குழப்பம் நிலவிவருகிறது. இந்நிலையில் உணவு, உடை, நீர், ஷாம்பு போன்ற அத்தியாவசியப்பொருட்களுக்கு கடும்  தட்டுப்பாடு நிலவுகிறது.
 
இந்நிலையில் இங்குள்ள இளம் பெண்கள் தம் கூந்தலை விற்று தங்களின் அத்தியாவசியத்தேவைகளை பூர்த்தி செய்துகொள்வதாகத் தகவல் வெளியாகின்றன.