வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 30 செப்டம்பர் 2022 (14:21 IST)

அக்டோபரில் வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

அக்டோபர் மாதத்தில் மட்டும் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு  9 நாட்கள் விடுமுறை என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

அக்டோபர் மாதத்தில்  தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளுக்கு 9 நாட்கள் விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர்  மாதம் நாளை தொடங்கவுள்ளது. அக்டோபர் மாதம்தான்  சரஸ்வதி பூஜை, விஜயதசமி, தீபாவளி என பல பண்டிகள் வரும்.  ஏற்கனவே, ஒவ்வொரு மாதமும், அனைத்து ஞாயிற்றுக்கிழமைககளும், 2 வது மற்றும் 4 வது சனிக்கிழமைகளின் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில், அக்டோபரில் விடுமுறை தினங்கள் பற்றி மக்கள் அறிந்துகொள்ளும் பொருட்டு ரிசர்வ் வங்கி ஒரு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி,

அக்டோபர் 2- காந்தி ஜெயந்தி
அக்டியோஅபர் 4 – ஆயுதபூஜை
அக்டோபர்- 5- விஜயதசமி
அக்டோபர்-8- 2வது சனிக்கிழமை
அக்டோபர்-9 – மிலாடி  நபி
அக்டோபர் -22  4 வது சனிக்கிழமை
அக்டோபர்-24- தீபாவளி
அக்டோபர் 30 – ஞாயிற்றுக்கிழமை  
  • என்று தெரிவித்துள்ளது.
எனவே மக்கள் முன் கூட்டியே திட்டமிட்டுக் கொள்வது நல்லது என்று அறிவுறுத்தப்படுகிறது.

Edited by Sinoj