வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (16:30 IST)

மக்கள் தியேட்டர் வராம இருக்க தியேட்டர்காரங்கதான் காரணம்!

மக்கள் திரையரங்குகளுக்கு வர அஞ்சுவதற்கு தியேட்டர்காரர்களே காரணம் என தயாரிப்பாளர் தேனப்பன் கூறியுள்ளார்.

கமல்ஹாசனின் காதலா காதலா மற்றும் பஞ்சதந்திரம் மற்றும் பேரன்பு உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட படங்களை தயாரித்தவர் பி எல் தேனப்பன்.  இவர் சமீபத்தில் அளித்த நேர்காணலில் மக்கள் திரையரங்குகளுக்கு வரவேண்டும் என்றால் அங்கு விற்கும் பொருட்களின் விலையைக் குறைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.

அந்த நேர்காணலில் ‘தியேட்டரில் பாப்கார்ன் ஆரம்பவிலை 150 ரூபாய், பார்க்கிங் செலவு ஒரு ஒரு குடும்பம் படம் பார்க்க வரவேண்டுமென்றால் செலவு மிக அதிகமாக ஆகிறது. இதையெல்லாம் குறைத்து நியாயமான விலைக்கு பொருட்களை விற்றால் மக்கள் கண்டிப்பாக திரையரங்குகளுக்கு வருவார்கள்’ எனக் கூறியுள்ளார்.