திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 25 நவம்பர் 2019 (13:38 IST)

திடீரென உடைந்த ஏரி: வெள்ளக்காடான பெங்களூர்!

பெங்களூரில் உள்ள ஹுலிமாவி ஏரியின் கரை திடீரென உடைந்ததால் அந்த பகுதியில் உள்ள குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கின.

கர்நாடக மாநிலங்களில் உள்ள ஏரிகளில் பெங்களூரில் உள்ள ஹுலிமாவி ஏரியும் ஒன்று. நேற்று ஏரியின் வடக்கு கரையில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் ஏரிநீர் குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மக்களை காப்பாற்றும்முயற்சியில் இறங்கினர்.

மீட்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் ஏரியில் திடீரென உடைப்பு ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.