திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 5 செப்டம்பர் 2022 (10:56 IST)

பெங்களூரை புரட்டி போட்ட மழை! – புல்டோசரில் பயணிக்கும் மக்கள்!

Bangalore
கடந்த சில காலமாகவே கர்நாடகா உள்ளிட்ட பல பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில் பெங்களூரில் நேற்று மிக கனமழை பெய்துள்ளது.

தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக பல பகுதிகளிலும் நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா உள்ளிட்ட பகுதிகளில் பெய்த கனமழையால் பல பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்துள்ளது.

பெங்களூரிலும் கனமழை காரணமாக பல பகுதிகளும் வெள்ளக்காடாகி உள்ளது. பிரதான சுரங்க பாதைகளில் நீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று பெங்களூரில் அதிகனமழை வெளுத்து வாங்கியுள்ளது. விடாமல் பெய்த மழையால் குடியிருப்பு பகுதிகளே வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

குடியிருப்பு பகுதிகளில் குட்டி அணை கட்டியது போல சுவற்று துவாரங்கள் வழியே தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் மக்கள் புல்டோசர்களில் ஏறி நீரோட்டத்தை கடந்து வருகின்றனர். பெங்களூர் வெள்ளம் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளன.