1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (12:40 IST)

பயணிகளை ஏற்றாமல் வெறும் லக்கேஜ் உடன் புறப்பட்டு சென்ற விமானம்!

Flight
பெங்களூரு விமான நிலையத்தில் பயணிகளை ஏற்றாமல் அவர்களுடைய லக்கேஜ் மட்டும் ஏற்றிக்கொண்டு விமானம் ஒன்று புறப்பட்டது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
 
பெங்களூரில் இருந்து டெல்லி செல்லும் தனியார் விமானம் ஒன்று நேற்று கிளம்ப தயாராக இருந்த நிலையில் போர்டிங் பாஸ் உடன் விமானத்தில் ஏற தயாராக இருந்த பயணிகளை ஏற்றாமல் விமானம் திடீரெனக் கிளம்பி சென்றது
 
இதனால் 54 பயணிகள் அந்த விமானத்தில் பயணம் செய்யவில்லை என்றும் ஆனால் அவர்களுடைய லக்கேஜ்கள் மட்டும் விமானத்தில் ஏற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது
 
இது ஒரு பயணிகள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் நிலையில் விமான போக்குவரத்து துறை அமைச்சருக்கு டேக் செய்து பதிவு செய்துள்ளனர். பெங்களூர் விமான நிலையத்தில் நடந்த இந்த குழப்பம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது இது குறித்து விசாரணை செய்யப்படும் என விமான நிலைய துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 
Edited by Mahendran