மின்சாரம் இல்லாமல் இயங்கும் வெண்ட்டிலேட்டர்! பெங்களூர் நிறுவனம் அசத்தல்!
பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்று மின்சாரம் இல்லாமல் இயங்கும் வெண்ட்டிலேட்டரைக் கண்டுபிடித்துள்ளது.
கொரோனா தடுப்புக் காலத்தில் மருத்துவர்களுக்கு மிகப்பெரிய சிக்கலாக அமைந்துள்ள போதுமான மருத்துவ உபகரணங்கள் இல்லாததுதான். அதிலும் வெண்ட்டிலேட்டர் எனப்படும் ஆக்ஸிஜன் வழங்கும் உபகரணங்கள் போதுமான அளவில் நம்மிடம் கையிருப்பு இல்லை என சொல்லப்படுகிறது.
பெங்களூருவைச் சேர்ந்த டைனமிக் டெக் என்ற நிறுவனம் மிகக் குறைந்த (ரூ 2500) விலையில் மின்சாரம் இல்லாமல் இயங்கும் வென்டிலேட்டர் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளது. இந்த கண்டுபிடிப்பை நிதி ஆயோக் பாராட்டியுள்ளது. இது குறித்து சிஇஓ அபிதாப் காந்த் ‘.எந்த பாகமும் இறக்குமதி செய்யாமல் மின்சாரம் தேவையில்லாமல் எலெக்ட்ரானிக் பாகங்கள் எதுவுமில்லாமல். தேவையான அழுத்தத்தில் ஆக்சிஜன் வழங்கும் திறனுடன் இந்த வெண்ட்டிலேட்டர் உள்ளது. இது முழுக்க முழுக்க இந்தியாவின் கண்டுபிடிப்பு. நெருக்கடி காலத்தில் இந்தக் கண்டுபிடிப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது' எனப் பாராட்டு தெரிவித்துள்ளார்.