1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By papiksha joseph
Last Updated : சனி, 3 ஜூன் 2023 (11:22 IST)

ச்சே... வெட்கக்கேடு... அடுத்தடுத்து 3 ரயில்கள் எப்படி மோதும்? பிரபல இயக்குனர் காட்டம்!

கொல்கத்தாவில் இருந்து சென்னையை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது.  பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.
 
இதையடுத்து அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது.  இதில் 300 பேர் பலியாகியுள்ளனர். இதில் 1,200 பயணிகளுக்கு எந்தவித பாதிப்பு இல்லாமல் உயிர்தப்பியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது.
 
இந்நிலையில் இந்த ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் திரைபிரபலங்கள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில் பாலிவுட் இயக்குநர் விவேக் ரஞ்சன், இது ரொம்ப வெட்கக்கேடா இருக்கு....ஒரே நேரத்தில் 3 ரயில்கள் எப்படி அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்படும்? இந்த காலத்தில் இத்தனை தொழில்நுட்ப வளர்ச்சி, பாதுகாப்பு அம்சங்கள் வளர்ந்த பின்னர் இதெல்லாம் எப்படி சாத்தியமாகும்? இதற்கு யார் பொறுப்பேற்க போவது? உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்காக பிரார்த்தனை செய்கிறேன்.. ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார்.