1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (07:55 IST)

காவலர்கள் விடுப்பு எடுக்க திடீர் தடை: அதிர்ச்சி காரணம்

வரும் 10ம் தேதி முதல் தமிழக காவல்துறையில் பணிபுரியும் அனைவரும் விடுப்பு எடுக்க தடை விதிக்கப்பட்டு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. இதனால் காவல்துறையினர்களிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
காவலர்கள் அவசர காரியமாக விடுமுறை எடுப்பது வழக்கமான ஒன்றுதான். ஆனால் நவம்பர் 10 முதல் மறு உத்தரவு வரும் வரை பணியில் உள்ள எந்த பிரிவின் காவலர்களும் விடுப்பு எடுக்கக் கூடாது என உயர் அதிகாரிகளிடமிருந்து சுற்றறிக்கையை பேக்ஸ் மூலம் அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
 
அயோத்தி வழக்கு முடிவடைந்து விரைவில் தீர்ப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த தீர்ப்பினால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்பதற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காவலர்கள் யாரும் விடுப்பு எடுக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.
 
அயோத்தி தீர்ப்பு எந்த பக்கம் சார்பாக வந்தாலும் கண்டிப்பாக இன்னொரு பிரிவினர்களால் பிரச்சனைகள் ஏற்படலாம் என்றும் அந்த பிரச்சனைகளை சமாளிக்க காவல்துறையினர் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருக்கலாம் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன