வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Updated : வெள்ளி, 7 ஏப்ரல் 2017 (05:55 IST)

காஷ்மீரில் இந்திய ராணுவ வீரர்கள் திடீர் மாயம்: என்ன ஆச்சு?

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரர்களில் திடீரென 5 வீரர்களை காணவில்லை என்றும் இருப்பினும் இவர்களின் மீட்கப்பட்ட இரண்டு ராணுவ வீரர்களிடம் இருந்து கிடைத்த தகவலின்படி அங்கு ஏற்பட்ட பனிச்சரிவில் காரணமாக இந்திய வீரர்களை காணவில்லை என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.



 


ஜம்மு-காஷ்மீரில் இதுவரை இல்லாத வகையில் கடுமையான பனிச்சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்திய ராணுவ கண்காணிப்பு கோபுரத்தின் அருகே பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 5 ராணுவ வீரர்கள் பனிச்சரிவில் சிக்கியதாகவும் அவர்களில் 2 பேர் மீட்கப்பட்டதாகவும், மீதமுள்ள மூவரை மீட்புக்குழுவினர் தேடி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது.

காஷ்மீரில் ஏற்பட்ட பனிச்சரிவை அடுத்து ஹிமாச்சல பிரதேசம், கார்கில் ஆகிய பகுதிகளில் பணியில் இருக்கும் ராணுவ வீரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு தொடர வாய்ப்பு இருப்பதால் பள்ளிகளுக்கு அடுத்த 5 நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்புடன் இருக்க அரசு அறிவுறுத்தியுள்ளது. மேலும் காஷ்மீர் தேசிய நெடுஞ்சாலை பனிச்சரிவு காரணமாக மூடப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.