திங்கள், 20 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (08:11 IST)

மகளிர் இலவச பேருந்துக்கு எதிர்ப்பு: ஆட்டோவை கொளுத்தி நடத்திய போராட்டத்தால் பரபரப்பு..!

சமீபத்தில் ஆந்திர மாநிலத்தில் மகளிர் இலவச பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் இந்த போராட்டத்தின் நடுவே தனது ஆட்டோவை ஆட்டோ டிரைவர் ஒருவர் தீ வைத்து கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழகத்தில் மகளிருக்கு இலவச பேருந்து என்ற திட்டம் அமல்படுத்தப்பட்ட நிலையில் இந்த திட்டத்தை ஒரு சில மாநிலங்கள்  கடைப்பிடித்து வருவது வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் ஆந்திராவிலும் மகளிர் இலவச பேருந்து திட்டம் தொடங்கப்பட்ட நிலையில் இந்த திட்டத்திற்கு ஆட்டோ ஓட்டுநர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தத் திட்டத்தால் தங்களுக்கு வருமானம் குறைவதாக அவர்கள் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் இது குறித்து ஹைதராபாத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்ற நிலையில் திடீரென ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் தனது ஆட்டோவை தீவைத்துக் கொளுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த போராட்டத்தை காவல்துறையினர் கலைத்து அந்த பகுதியில் அமைதியை ஏற்படுத்தி உள்ளனர்

Edited by Siva