செவ்வாய், 25 ஜூன் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 14 பிப்ரவரி 2024 (15:43 IST)

சட்டமன்றத்தை முற்றுகையிட முயற்சி..! போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு..!!

porattam
புதுச்சேரி பொதுப்பணியில் பணி நீக்கம் செய்யப்பட்ட  ஊழியர்கள், தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி சட்டமன்றத்தை முற்றுகையிட ஊர்வலமாக சென்ற போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் மறைமலை அடிகள் சாலையில் அமர்ந்து மறியல்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
புதுச்சேரி பொதுப்பணித்துறையில் 2016ம் ஆண்டு வவூச்சர் ஊழியர்களாக 2 ஆயிரம் பேர் பணி அமர்த்தப்பட்டனர். அதனைத்தொடர்ந்து நடந்த தேர்தலின் போது இவர்கள் பணி நியமனத்தில் முறைகேடு நடத்திருப்பதாக கூறி தேர்தல் ஆணையம் இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்தது. 
 
அதனைத்தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட தங்களுக்கு மீண்டும் பணி வழங்க கோரி அவர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.  இந்த நிலையில்  கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரின் போது இவர்களுக்கு மீண்டும் பணி வழங்கப்படும் என முதல்வர் ரங்கசாமி அறிவித்தார்.

அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டு ஆகியும் பணி வழங்காததால் கடந்த 12ம் தேதி முதல் சுதேசி மில் அருகே தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். 

 
இந்நிலையில் இன்று அங்கிருந்து ஊர்வலமாக சென்று சட்டமன்றத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்ற போது புதுச்சேரி தாவரவியல் பூங்கா அருகே அவர்களை போலீசார் தடுத்ததால் அங்கேயே சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.