புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Modified: வியாழன், 21 பிப்ரவரி 2019 (12:34 IST)

சவப்பெட்டிகளை ரெடியா வெச்சுக்கோங்க: இந்தியாவை மிரட்டும் பயங்கரவாத அமைப்பு

மீண்டும் இந்தியா மீது தாக்குதல்கள் தொடரும் எனவும் சவப்பெட்டிகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள் எனவும் பயங்கரவாத அமைப்பை சேர்ந்த ஒருவன் வீடியோவை வெளியிட்டுள்ளான்.
 
காஷ்மீர் பகுதியில் உள்ள புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பு கடந்த வாரம் வியாழக்கிழமை நடந்த மனித வெடிகுண்டு தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இது நாடு முழுதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. 
 
இந்த தாக்குதலுக்கு பின்னர் பாகிஸ்தான் இருப்பதால் இந்தியா பாகிஸ்தனை தனிமைப்படுத்துவம், அந்நாட்டின் மீது பதில் தாக்குதல் நடத்தவும் காத்துக்கொண்டிருக்கிறது. அதோடு, பாகிஸ்தன மீது வணிகப்போரை துவங்கிவிட்டது.
 
இந்நிலையில், ஹிஸ்புல் முஜாகிதீன் எனும் பயங்கரவாத அமைப்பின் தளபதி ரியாஸ் வெளியிட்டுள்ள ஆடியோவில், சமீபத்தில் புல்வாமாவில் நடந்த தாக்குதல் போலவே வருங்காலத்தில் தாக்குதல்கள் நடத்தப்படும். பிணங்களை புதைக்க சவப்பெட்டிகளை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்.
 
எங்கள் அமைப்பில் 15 வயது சிறுவன் கூட தற்கொலை படை தாக்குதலுக்கு தயாராக இருக்கிறான். ஆகவே காஷ்மீர் இளைஞர்களை வைத்தே வரும் காலங்களில் தாக்குதல் நடத்தப்படும் என மிரட்டல் விடுத்துள்ளான்.