புதன், 10 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 12 நவம்பர் 2025 (17:29 IST)

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?

பின்லேடனின் பேச்சை மொபைல் போனில் வைத்திருந்தமென்பொறியாளர் கைது.. டெல்லி சம்பவத்திற்கு தொடர்பா?
அல்-கொய்தா மற்றும் தடை செய்யப்பட்ட அமைப்புகளுடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்படும் வழக்கில் மென்பொருள் பொறியாளர் சுபைர் ஹங்கர்கேகர் என்பவர் கைது செய்யப்பட்டார்.  மகாராஷ்டிரா பயங்கரவாத தடுப்புப் படை (ATS) தானேயில் உள்ள ஒரு ஆசிரியர் உட்பட இருவரிடம் சோதனை நடத்தியுள்ளது.
 
ஹங்கர்கேகரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், முன்னாள் அல்-கொய்தா தலைவர் ஒசாமா பின்லேடனின் உரை மற்றும் IED வெடிகுண்டு தயாரிப்பது குறித்த ஆவணங்கள் அடங்கிய நீக்கப்பட்ட PDF கோப்புகள் மொபைல் போன்களிலிருந்து கைப்பற்றப்பட்டன.
 
ஹங்கர்கேகர் ரகசிய கூட்டங்களுக்காக தானேயின் மும்ப்ரா பகுதிக்கு சென்றுள்ளார் என்ற தகவலின் பேரில், அங்குள்ள ஆசிரியர் ஒருவரிடமும் புனேவில் உள்ள மற்றொருவரிடமும் ATS அதிகாரிகள் செவ்வாயன்று விசாரணை நடத்தினர். அவரது பழைய போனில் பாகிஸ்தான் உட்பட ஐந்து பன்னாட்டு எண்கள் சேமிக்கப்பட்டிருந்ததை ATS கண்டறிந்தது. 
 
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்துடன் ஹங்கர்கேகருக்குத் தொடர்பு இருக்கிறதா என்பது குறித்தும் ATS விசாரித்து வருகிறது.
 
Edited by Siva