1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Murugan
Last Modified: புதன், 16 நவம்பர் 2016 (19:58 IST)

ஏ.டி.எம்-களில் பணம் எப்போது சுலபமாக கிடைக்கும் தெரியுமா?

ஏ.டி.எம்-களில் பணம் எப்போது சுலபமாக கிடைக்கும் தெரியுமா?

புதிய 500, 2000 ரூபாய் நோட்டுகளை வழங்கும் விதமாக, இந்தியாவில் உள்ள பாதி ஏ.டி.எம் மையங்கள் மறுசீரமைப்பு செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.


 

 
மத்திய அரசின் அறிவிப்பை அடுத்து, புதிய நோட்டுகளை பெற, இந்தியா முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்துக் கிடக்கின்றனர். 
 
ஆனால், பல ஏ.டி.எம் மையங்களில் 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே வருவதால், அவை விரைவாக தீர்ந்து விடுகின்றன. பெரும்பாலான வங்கிகளில் 2000 ரூபாய் நோட்டுகள் மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் அவற்றிற்கு சில்லரை கிடைப்பதில்லை. எனவே பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
 
இந்நிலையில், புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை ஏ.டி.எம் இயந்திரத்தில் வைக்க சில மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளது. ஏனெனில், புதிய நோட்டுகளின் வடிவம், முந்தைய நோட்டுகளின் வடிவத்திலிருந்து வேறுபட்டுள்ளது. மேலும், தற்போது புதிய 500 ரூபாய் நோட்டுகள் புழக்கத்திற்கு வந்துள்ளது. 
 
எனவே, புதிய நோட்டுகளை வழங்கும் விதமாக, தற்போது உள்ள ஏ.டி.எம் இயந்திரங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டு வருகிறது. அடுத்த வாரத்திற்குள், நாட்டில் உள்ள பாதி ஏ.டி.எம்கள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு விடும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
 
எனவே, அடுத்த வாரத்திற்கு பின், ஏ.டி.எம் மையங்களில் புதிய பணத்தை எடுப்பது எளிதாக தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.